Tuesday 7th of May 2024 06:02:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கைக்கான நோர்வே, நெதர்லாந்து உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வே, நெதர்லாந்து உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு!


கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (13) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் சேதனப் பசளையை ஊக்குவிக்கும் விடயத்தில் அனைத்து நாடுகளும் கிழக்கு மாகாணத்தை அவதாணித்துக் கொண்டிருப்பதாகவும், கிழக்கின் விவசாயத்தை ஊக்குவிக்கும் விடயத்தில் மிகவும் கரிசனையாக இருப்பதாகவும் நெதர்லாந்து உயரிஸ்தானிகர் குறிப்பிட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

நெதர்லாந்து சிறிய நாடாக இருந்தாலும் சேதன பசளை தயாரிக்கும் விடயத்தில் சர்வதேச மட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதன்போது தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாண சுறுலாத்துறையைமேம்படுத்துவது குறித்தும் கல்வி விவசாய அபிவிருத்தித்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும் இதன்போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசேகர மற்றும் பல அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE